Tuesday, June 20, 2017

பூனைகளும் எறும்புகளும்

       மொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில்  ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அது குட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும் வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டோம். குட்டிகளும் சற்று பெரியவையாகி விளையாட ஆரம்பித்து விட்டன. விளையாட்டை ரசிப்பவர்களுக்கு அவைகளின் ஒரு சலனப்படம் கீழே.  

Tuesday, April 18, 2017

சோலார் பவரும் என் அனுபவங்களும்-5

 சென்ற செப்டம்பர் பதிவை நிறைவு செய்யும் போது குரங்கு -பூனைகள்- ரொட்டி கதை சொன்னேன் நினைவிருக்கிறதா? :)  கதைக்கு இங்கே

அதாவது என்னுடைய சூரிய சக்தி தகடுகள் 8 யூனிட்களுக்கு பதிலாக ஏழுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கின்றனவே இதை கூட்டுவது எப்படி- அதாவது அதன் முழு பலனையும் அடைவது எப்படி என்ற சிந்தனை எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்போது தான் நாங்கள் ஒரு மாதம் ஊரை விட்டே போகக் கூடிய சூழ்நிலை வந்தது, இது என்னடா! முழு உற்பத்தி திறனும் வீணாகப் போய்விடுமே என்ற எண்ணம் தோன்றிய போது கூடவே ஒரு வழியும் கண்டேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Sunday, January 8, 2017

பீம் பாயும் ரொக்கமில்லா வர்த்தகமும்

நேற்று தொலைக்காட்சி பொதிகையில் ஒரு புதிய சொற்றொடரை கற்றுக்கொண்டேன்.  “ரொக்கமில்லா வர்த்தகம்” என்பது cashless transaction என்பதற்கு தமிழாக்கமாக பயன்படுத்தப்பட்டது.  ‘காசற்ற வாணிபம்” என்று சென்ற பதிவில்  நான் பயன்படுத்திய சொற்றொடரைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது. அதையே  வைத்துக் கொள்வோம்.

மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் கமலஹாசன் பீம் பாய் பீம் பாய் என்று அடிக்கொருதரம் தன்னுடைய உதவியாளரை கூப்பிடுவார். அப்படிப்பட்ட உதவியாளர்தான் இந்த புதிய BHIM APP என்று நினைத்தேன்